Home arrow News arrow Humanitarian Visa to Australia for affected Sri Lankan Tamils
Tuesday, 14 October 2008
 
 
Humanitarian Visa to Australia for affected Sri Lankan Tamils PDF Print E-mail

அவுஸ்திரேலியா செல்வதற்கான மனிதாபிமான விசாவும் விண்ணப்பிக்கும் தகுதிகளும்

"..அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சீ.ஆர்.) உலகளாவிய மீள்குடியேற்றத் தேவைகளின் மதிப்பீட்டு வழிகாட்டலின் பேரில் அவுஸ்திரேலிய மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், அண்மையில் பத்திரிகைகளில் வெளியானது போன்று இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கென, இதனைத் தவிர வேறு விசேட விசா வழங்கல் திட்டம் எதுவும் கிடையாது. .."

அவுஸ்திரேலியா பாரபட்சமற்ற, மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய குடியேற்ற வலயத்திற்கு வெளியே வசிப்பவர்களுக்கென உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியுள்ளது. மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் இரண்டு வகையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒன்று அகதிகளுக்கானது. இதன் கீழ், யு.என்.எச்.சி.ஆரினால் அகதிகளாக கணிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்காக அவுஸ்திரேலியா செல்லலாமென பரிந்துரை பெறக்கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றையது, விசேட மனிதாபிமான அடிப்படையை கொண்டதாகும்.
உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டால் தற்போது தாய் நாட்டிற்கு வெளியே பிறிதொரு நாட்டில் தஞ்சம் புகுந்து தாய் நாட்டில் துன்புறுத்தல்கள், பாரபட்சம் அல்லது மனித உரிமை மீறல்கள் காரணமாக தாய்நாடு திரும்பமுடியாதோரும் அதேவேளை மீள்குடியேற்றம் அவசியப்படுவோரும் இத்திட்டத்தின் கீழ் விசா கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த புகலிட நாடு அவர்களது முதலாவது புகலிட நாடாக இருக்க வேண்டும். இந்த வகையினருக்கே கூடுதல் விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், முதலாவது புகலிட நாட்டிலிருந்து வெளியேறி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்து அவுஸ்திரேலிய குடியேற்ற வலயத்திற்கு வெளியே தங்கி இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்காதவர்களும் இலங்கையிலிருந்து வெளியேறி பிறிதொரு நாட்டில் அல்லது முதலாவது புகலிட நாட்டில் இருந்து கொண்டு மற்றுமொரு நாட்டுக்கு செல்ல முயற்சிப்பவர்கள், தாய்நாடு திரும்பினால் துன்புறுத்தல்களுக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாகக் கூடியவர்கள் ஆகியோருக்கும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற தற்காலிக அனுமதி வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

பெற்றாரை இழந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அல்லது பெற்றாரிடமிருந்து பிரிந்து வாழும் சிறுவர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற விசா வழங்கப்படும். எவ்வாறாயினும், சிறுவரின் அவுஸ்திரேலிய பிரவேசம் அந்தச் சிறுவரின் முழுமையான நலனையும் பெற்றாரின் உரிமைகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் கருத்தில் கொள்ளும்.

மனிதாபிமான விசாவைப் பெற ஏராளமான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக மட்டுப்படுத்தப்பட்ட தொகையிலான விசாக்களே இருப்பதால் அவுஸ்திரேலியாவில் மீள் குடியேற அவசியமான மனிதாபிமான தேவைகள் இருப்பவர்களுக்கும் வேறு மாற்றுவழி இல்லாதவர்களுக்கும் மாத்திரமே இவ்விசா வழங்கப்படுகிறது. இதனால் பெரும் தொகையான விண்ணப்பதாரிகள் ஏமாற்றமடைகிறார்கள்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சீ.ஆர்.) உலகளாவிய மீள்குடியேற்றத் தேவைகளின் மதிப்பீட்டு வழிகாட்டலின் பேரில் அவுஸ்திரேலிய மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், அண்மையில் பத்திரிகைகளில் வெளியானது போன்று இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கென, இதனைத் தவிர வேறு விசேட விசா வழங்கல் திட்டம் எதுவும் கிடையாது.

விண்ணப்பப் படிவத்தை அவுஸ்திரேலிய குடிவரவு, பல்கலாசார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் www.immi.gov.au. என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக செல்ல வசதி உள்ளவர்கள், TTS விசா விண்ணப்ப நிலையம், 32B, சேர் மொஹமட் மாக்கான் மரிக்கார் மாவத்தை, கொழும்பு-03 (ஹொலிடே இன் ஹோட்டல் அருகில்) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தொ.பே: 2430991 அல்லது 2430992.

நிரப்பிய விண்ணப்பப் படிவத்தை கையளிக்கும் இடம்: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம், 21, கிரிகரிஸ் வீதி, கொழும்பு 7 அல்லது அஞ்சல் செய்யும் முகவரி: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம், தபால் பெட்டி இல: 742, கொழும்பு.

< Previous   Next >
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

 
Top! Top!

Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com