தலை குளித்த கிழக்கு. புத்தாடை அணிந்த மேகங்கள். கதிரவனின் கைகளெல்லாம் மத்தாப்புக் கதிர்கள்.
தெறித்த அந்த மத்தாப்பின் ஒளித்துளிகள் அணையாமல் நட்சத்திரங்கள். வானத்திலும் தீபாவளி. மண்ணிலிருந்து விண்ணுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு ராக்கெட் பாய்ச்சல். சிறியவர்களின் புலிபாய்ச்சல். துணிவோடு அவர்கள் துப்பாக்கிகளேந்தி துரத்திக்கொண்டோட அன்று நரகாசூரன் சாய்ந்தானோ இல்லையோ இன்று நயவஞ்சகர் வீழட்டும். காடெரிந்த புகையாய்... கட்டுடல் உருவமாய் காகிதம் சிதறி கிழிய சிந்தும் கந்தக வாடைக்கு சிறார் செய்த சிவகாசிவெடி குடிசைகளில் செய்த ஓலைவெடி மண்ணில் - தான் மிதிபட்டால் வெடிக்கும் வெங்காய வெடி சீனிவெடி ஊசிவெடி இன்னும் இன்னும் வெடிகள். மின்னலுக்குள் வண்ணத் தீக்குச்சிக் கொளுத்துவது போல இடிமுழக்கத்துக்குள் வெடிவெடிப்பது போல சிறியவர்களாய் எவரும் துணிவோடு துப்பாக்கிளேந்தி துரத்திக்கொண்டோட ஈழத்தில் அவர்களும் கொண்டாடுகிறார்கள் தீபாவளி.
-பட்டுக்கோட்டை தமிழ்மதி |