Home arrow News arrow Sydney Harbour Bridge Climb - By Kana Praba, Ausralia
Thursday, 09 February 2012
 
 
Sydney Harbour Bridge Climb - By Kana Praba, Ausralia PDF Print E-mail
bridge0.jpgசிட்னி ஹாபர்பிரிட்ஜில் நடக்கலாம், வாங்க
அவுஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க கேந்திரங்களில் ஒன்று ஹாபர் பிரிட்ஜ் எனப்படும் சிட்னி மேம்பாலம். அவுஸ்திரேலியா வர விரும்பாதவர்கள் இந்தியன் படத்தில் வரும் "ரெலிபோன் மணி போல்" பாடலை மீண்டும் பார்க்கவும்.அதில் வரும் மேம்பாலம் தான் இது. உலகின் மிகப்பெரிய (உலகின் மிக நீளமானது அல்ல)மேம்பாலமாகக் கருதப்படும் இது நீர் மட்டத்திலிருந்து 134 மீற்றர் மேலே உள்ளது.1932 ஆம ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹாபர் பிரிட்ச் இந்த ஆண்டுடன் தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த மேம்பாலம் உள்ளூர் வாசிகளால் Coathanger கோர்ட்டுக் கொழுவி (இது வேற கொழுவி) என்று அழைக்கப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிறீன்வே என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னித் துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலக யுத்தத்தைத் தொடந்து முனைப்போடு இப்பணியில் இறங்கி பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை Dr J J C Bradfield மற்றும் NSW Department of Public Works சார்ந்த நிபுணர்கள் தயாரித்தனர்.பின்னர் உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்வி விண்ணப்பங்களை நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு Dorman Long and Co of Middlesbrough என்ற ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனவாம். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 ரயில் தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்றாம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது பின்னர் 1950 இச்சேவை நிறுத்தப்பட்டது.



bridge0.jpg



































1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் John T. Lang இனால் இது உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ரிப்பன் வெட்டவில்லை, அது ஒரு வேடிக்கையான சம்பவம் Captain Francis De Groot என்பவர் இதை அரசியலாக்கி ரிப்பன் வெட்டும் உரிமை அரச குடும்பத்துக்கு மட்டுமே உண்டு என்று கண்டனம் தெரிவித்ததே அதற்குக் காரணம்.



சிட்னி நகருக்ககும் புறநகர்ப்பகுதிகளுக்குமான போக்குவரத்துக்கான பிரதான மேம்பாலமாக இது இருந்தாலும்வருடாவருடம் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் Bridge climb எனப்படும் பாலம் ஏறும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றார்கள். தகுந்த பயிற்சிகளுடன் பாலத்தின் மேற்பரப்பில் உலாவி வரலாம், கட்டணம் உண்டு, நானும் போயிருக்கிறேன் (அது பெரிய கதை)இந்த பாலமேறுதல் பற்றி இன்னொரு பதிவில் நானோ அல்லது இன்னொரு கங்காருவோ சொல்லுவோம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை 18, மார்ச் அன்று இந்த மேம்பாலம் கட்டிய 75 ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து ஹாபர் மேம்பால நடை (bridge walk) ஒன்று சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது, அன்று புழக்கத்திலிருக்கும் போக்குவரத்துக்கள்இந்த மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டு காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குட்பட்ட வசதியான நேரத்தில் காலாற நடந்து வரலாம்.

நடை போட இருப்பவர்கள் ஹாபர் பிரிட்ஜ் இன் உத்தியோகபூர்வத்தளத்தில் முற்கூட்டியே பதிவு செய்யவேண்டும்.

இதோ அந்த முகவரி
http://ourbridge.com.au/

சரி நான் நடக்கப் போறன்,

வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி
அவுஸ்திரேலிய அரசின் கலாச்சார மற்றும் பொழுபோக்கு தகவல் தளம்

சுற்றியவர்: கானா பிரபா
< Previous   Next >
Who's Online
We have 47 guests online
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

Attractions

Sydney Opera House

Harbour Bridge Climb

Sydney Olympic Park

Featherdale Wildlife Park

Scenic World

 
Top! Top!


Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com