Home arrow News arrow Mullaitivu massacre by Sri Lankan Government - Vigil in Sydney
Thursday, 09 February 2012
 
 
Mullaitivu massacre by Sri Lankan Government - Vigil in Sydney PDF Print E-mail
முல்லைப்படுகொலை: சிட்னியில் கவனயீர்ப்பு மற்றும் அகவணக்க நிகழ்வு
சிறிலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் முல்லைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவியருக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான சிட்னி வாழ் மக்கள் சிட்னி நகரின் பிரதான வர்த்தக நடுவத்திலும் மாநில பாராளுமன்றம் முன்பாகவும் நின்று இந்த அகவணக்க நிகழ்வு மற்றும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தமிழரல்லாத அவுஸ்திரேலியரிடையே விநியோகிக்கப்பட்டது. துண்டுப்பிரசுரங்களை வாங்கிச் சென்ற அவுஸ்திரேலியர்கள் தமது அதிரச்சியையும் சிறிலங்கா அரசின் மீதான ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர்.





கையளிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் UNICEF நிறுவன முதல்வர் Jo Anna Van Gerpen இன் கூற்றாக "கொல்லப்பட்ட சிறுவர்கள் முதலுதவி சிகிச்சை பற்றிய பயிற்சியிலே பங்கேற்றதாகவும்" தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களது அவதானிப்பாக "இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல்" என்றும் குறிப்பிட்டிருந்தது.





122 கறுப்பு பலூன்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட்டது.  இது அங்கு குழுமியிருறந்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. பலர் மனந்திறந்து தமது ஆதங்கத்தையும் உணர்வுகளையும் வெளிக்கொண்டு வந்தனர்.

மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பார்பரா பெர்ரி தனது உரையில் தமிழர்களுக்குத் தனது ஆதரவையும் அநுதாபத்தையும் தெரிவித்தார்.





தமிழர் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் மாலையில் மாநில பராளுமன்றம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு நிகழ்வை நிகழ்த்தினர்.  படுகொலை செய்யப்பட்ட மாணவியரின் புகைப்படங்களுடன் கூடிய அட்டைகளை தாங்கியபடி மனிதாபிமானத்தை ஈர்க்கும் வண்ணப்பட்டிகளை அணிந்து கொண்டு இளையோருடன் தமிழரல்லாத அவுஸ்திரேலியர் பலரும் Green Party இன் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின் இன்னொரு நகரான மெல்பேர்னிலும் சிட்னியின் பிற பாகங்கிலும் இத்தகைய நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Courtesy : Puthinam

< Previous   Next >
Who's Online
We have 48 guests online
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

Attractions

Sydney Opera House

Harbour Bridge Climb

Sydney Olympic Park

Featherdale Wildlife Park

Scenic World

 
Top! Top!


Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com