| Padmashree K.J.Jesudas live in concert @ Sydney Opera House |
|
|
|
Date: 01st Oct 2006 இந்த நிகழ்ச்சி நமக்கு மட்டுமல்ல யேசுதாஸ் அவர்களுக்கும் புது அனுபவம் தான். அதனால் தான் மற்றக் கச்சேரிகளை மறுத்து விட்டு இங்கு வருகிறார். சிட்னி ஒப்பரா ஹவ்ஸ் - உலகில் மிகவும் அறியப் பட்ட அரங்கம். கரையில் மிதக்கும் கட்டடக் கப்பல். ஆண்டுக்கு 3000 கச்சேரிகளையும் 2 மில்லியன் ரசிகர்களையும் உலகின் தலை சிறந்த கலைஞர்களையும் கவர்ந்திழுக்கும் நமது ஒப்பரா ஹவுஸ் யேசுதாஸையும் ஈர்த்தததில் ஆச்சரியமில்லை. இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருக்கும்; Symphony Entertainers நிறுவனத்தைச் சேர்ந்த கஸ்டன் போல் சொல்கின்றார் “ இந்த ஹோலை எடுப்பதற்கு நாங்கள் பட்ட கஸ்டத்தை விட எமக்கு இருந்த அதிர்ஸ்டம் தான் அதிகம்” என்று. உண்மை தான் உலகில் 2வது மிக பிஸியான அரங்கங்கம் இது. புக்கிங் ஒன்றரை வருடத்துக்கு முன் கூட்டியே நடக்க வேண்டும். “அதால தான் முதல் ஹோலை புக் பண்றதுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்” என்கிறார் ரோனி செபரட்ணம் - நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவர். “ஹோல் கிடைத்ததுடன் ஏற்பட்ட சந்தோஸம் கொஞ்ச நேரம் தான். உடனேயே அடுத்த கேள்வி கிளம்பிட்டிது. யாருடைய நிகழ்ச்சியை வைப்பது என்று” தொடர்கிறார் கஸ்டன் போல், ““Sydney Opera House ஒரு கிளாஸான இடம். அங்கே நிகழ்ச்சி வழங்குகிறவர்களும் சரி நிகழ்ச்சியை பார்க்க வருகி;றவர்களும் சரி தரமானவர்கள்”. பிரபல ஹோலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்சியின் படமான குண்டுன் (KUNDUN) முதல், காந்தியை மையமாகக் கொண்டு ரொட்டர்டாம் நகர் ஆதரவில் தயாரான சத்யாக்ரஹ எனும் ஒப்பரா வரை இசையமைத்த பில் கிளாஸ் உட்பட (இவர் பண்டிட் ரவிஸங்கருடனும் கச்சேரி செய்தவர்) பல்வேறு நாடுகளின் உன்னத இசைக் குழுக்கள், பாடகர்கள் ஏறிய அரங்கமிது. “அப்பிடிப்பட்ட ஒரு அரங்கத்தில் நிகழ்ச்சி செய்ய வருகின்றவரும் ஒரு சரியான தரம் உள்ளவராக இருக்க வேணும் என்றது எங்களின் விருப்பமாக இருந்தது. ஆதால தான் நாங்கள் யேசுதாஸை தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் கதிர் - Symphony Entertainers செயலர். “யேசுதாஸ் வெறும் சினிமா பாடகர் மட்டுமில்ல. செம்பை மரபில் வந்த ஒரு சாஸ்த்திரிய பாடகர். மதங்களுக்கும் மொழிகளுக்கும் அப்பால் பட்ட ஒரு மனிதர். அதை விட ஒரு ஜென்டில்மன். ஆதால தான் நாங்கள் எல்லோரும் அவரை தேர்ந்தெடுத்தோம்” – முடிக்கிறார் கதிர்.சுpட்னி ஒப்பரா ஹவுஸின் பிரதான நிகழ்ச்சி மண்டபமான கொன்சேர்ட ஹோல் சுமார் 2700 இருக்கைகள் கொண்ட அரங்கம். இசை நிகழ்ச்சிகளுக்கென்றே உருவாக்கபட்ட ஒன்று. இந்த அரங்கத்தின் உயர்ந்த கூரை இசைக்குக் கொடுக்கும் அதிர்வு அலாதியானது. The Concert Hall is “live” and bright with strong reverberance due to high ceiling- என்கிறது அரங்க அறிமுக நூல். அப்படிப்பட்ட ஓர் அரங்கத்தில் தான் எல்லோரையும் தன் குரல் இனிமையால் ஈர்த்த யேசுதாஸ் பாட வருகிறார். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். பாடத் தெரிந்தவர்களுக்கு குரல் பாதி கூடம் பாதி. யேசுதஸின் குரலும் Sydney Opera House அதிர்வும் தரப்போவது ஒரு கிண்ணென்ற சுகானுபவம்.
|
| < Previous |
|---|





