Home arrow News arrow Tamil Youth Australia Thank (Tamil Nadu ) Indian Student for exposing Sri Lankan Govt Atrocities
Saturday, 04 February 2012
 
 
Tamil Youth Australia Thank (Tamil Nadu ) Indian Student for exposing Sri Lankan Govt Atrocities PDF Print E-mail
Tamil Youth Australia Thank (Tamil Nadu ) Indian Student for exposing Sri Lankan Govt Atrocities tyoau.jpg

 

 

 

 

 

 

21.10.2008

அன்பின் சொந்தங்களே,

நீங்கள் அண்மையில் நடாத்திய போராட்டம் பற்றி அறிந்தோம்.உலகில் பலமான துடிப்பான சக்தி மாணவர் சக்தி என்பதனை நாம் அறிவோம்.அந்த சக்தி ஈழத்தமிழனுக்கு கண்ணீர்சிந்தும் போது அதனை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளை தேட எம்மால் முடியவில்லை. உங்களின் இனவுணர்ச்சிக்கு நாம் தலை வணங்குகின்றோம். ஈழத்தமிழன் அரசியல் அநாதை அல்ல என்பதை தமிழ்நாட்டு மாணவர் சமூகமும் ஒரணியில் திரண்டு நிற்கும் அரசியல் தலைவர்களும் மற்றும் தாய்த்தமிழக உறவுகளும் நிரூபித்து விட்டீர்கள்.

உலகில் தமிழின உணர்வு செத்து விடவில்லை இன்னும் உறுதியாக கொழுந்துவிட்டு எரிகின்றது என்பதை பார்க்கும் போது எம்மை அறியாமலே கண்ணீர் கசிகின்றது. அதிலும் தமிழக மாணவர் சமூகத்தின் எழுச்சியினை அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.

நீங்கள் மாணவர் சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழீழ மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை புரிந்து கொண்டிருபீர்கள். குப்பி விளக்கில் படிப்பும், நிரந்தரமில்லாத பாடசாலையும், அழிக்கப்பட்ட பாடசாலை கட்டடமும், மறுக்கப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகளும், கல்விசார் நடவடிக்கைக்கான கருவிகளின் மீதான இனவாத இலங்கை அரசின் தடைகளையும், மறுக்கப்படும் ஈழத்தமிழனின் உயர் கல்வி பற்றியும் மற்றும் ஈழத்தமிழர்களின் வழிபாட்டுதலங்கள், வைத்திய சாலைகள் அநாதை இல்லங்கள் மீதான தொடரும் இனவாத கொலை வெறி தாக்குதல்கள் பற்றியும்  தாங்கள் அறிந்திருப்பீர்கள்.அது மட்டும் அல்ல ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆய்வுகூடங்கள் இருக்கின்றதோ இல்லையோ கட்டாயம் பதுங்கு குழிகள் இருக்கவே செய்கின்றது. பாடசாலை நேரத்தின் பாதி நேரத்தை சிங்கள இனவாதிகளின் வான் கலங்களில் இருந்து தம்மை தாமே காப்பாற்ற பதுங்குழிகளில் இருக்க வேண்டிய அவல நிலையில் எம் தமிழீழ இரத்த உறவுகள்  இருப்பதையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.

இந்திய மத்திய அரசு இலங்கை இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்துவரும் ஆயுத பொருளாதார மனிதவள ஆதரவுகளை  நிறுத்த  உங்கள் பேரேழுச்சி நிச்சயம் து}ண்டும் என்பதில் அசையாத நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம்.

தொடர்ந்தும் இந்திய பேரரசுக்கு சிங்கள அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை நிறுத்த அழுத்தம் கொடுக்கவும், தமிழின படுகொலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும்,தமிழ்நாட்டு உறவுகளுக்கு எம் சோக நிலையை விளக்கவும் உங்களாலான அத்தனை வளங்களையும் உழைப்பினையும் மேற்கொள்ளவேண்டும் என உரிமையுடன் கேட்டு கொள்கின்றோம்.

நன்றி.

தாங்களின் தொப்புள் கொடி உறவுகள் சார்பாக,
தமிழ் இளையோர் அமைப்பு, அவுஸ்திரேலியா
http://www.tyoaustralia.org/

Related Photo - Human Chain Protest by Indian Students exposing Sri Lankan Government's Atrocities against minority Tamils.



student1.jpg










 

 

 




student1.jpg

< Previous   Next >
Who's Online
We have 33 guests online
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

Attractions

Sydney Opera House

Harbour Bridge Climb

Sydney Olympic Park

Featherdale Wildlife Park

Scenic World

 
Top! Top!


Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com