| Burning of Jaffna library remembered by Tamils in Sydney Australia - Flag Day |
|
|
|
http://www.vakthaa.tv/play.php?vid=1144 - Burning Memories Burning of Jaffna library, a symbol of Sri Lankan Tamils education, by Sri Lankan Government backed organised mobs , in 1981 will be remembered by Tamils in Sydney Australia. Sydney Tamil Resource Cenre is organise a Flag Week on 31st May 2008, sources said. The burning of the Jaffna library was an important event in the ongoing Sri Lankan civil war. An organized mob backed by Sri Lankan Government went on a rampage on the nights of May 31 to June 2, 1981, burning the Jaffna public library. It was one of the violent examples of ethnic biblioclasm of the twentieth century. The library at the time of destruction was one of the biggest in Asia containing over 97,000 unique books and unique manuscript. It is regarded as part of Sri Lankan Governments Genocide.
யாழ்ப்பாண நகரின் நவீனத்துவத்தினை நாடெல்லாம் பறைசாற்றுவதைப் போல விளங்கும் நவீன சந்தையின் நாற்புற கதவுகளும் இறுக்கி அடைத்துப் பூட்டப்பட்டிருந்தன. தங்கள் நகரில் இப்படியொரு நவீன சந்தைக் கட்டிடம் இல்லையே என்று பார்த்தோரைப் பொறாமை கொள்ள வைக்கும் இக்கட்டிடம் பகற் பொழுதுகளின் கலகலப்பையும் எழிலையும் தன்னுள் அடக்கி, இரவின் மோகனத்துள் ஆழ்ந்து கிடந்தது. யாழ்நகரின் இருதயக் கட்டிடம் இது. யாழ் நகரின் எழில் கட்டிடம் இது. நவீன சந்தைக் கடைகளின் விளம்பரப் பலகைகளின் மீது எரிந்து கொண்டிருந்த மின்சார லைற்றுள் சந்தையை ஒரு கார்ணிவலாக்க முயன்று கொண்டிருந்தன. நவீன சந்தைக் கட்டிடங்கள் இரண்டிற்கும் ஊடாக ஆஸ்பத்திரி வீதியையும் இணைத்துக் கொண்டு செல்கின்ற புதிய வீதி, கஸ்தூரியார் வீதியுடன் இணைந்து நகரின் முதுகெலும்பாகச் செல்கின்றது. அந்த வீதியில் ஒரு சில பாதசாரிகள் வடபுறமாகச் சென்று கொண்டிருந்தார்கள். யாழ்நகர், நவீனத்துவத்தினை மட்டுந்தான் கொண்டதல்ல. புதுமையோடு பழைமையையும் பேணும் ஒரு நகரம் என்பதுபோல நவீன சந்தைக்கும் காங்கேசந்துறை வீதிக்கும் இடையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பழைய சந்தைக் கட்டிடங்கள் இரண்டும் அமைந்திருந்தன. பழைய சந்தைக்குள் நுழையும் எவரும் புதுமையான ஓர் உணர்வினை அடையாமல் இருக்க முடியாது. பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு காலம் பயணம் செய்த அனுபவம் ஏற்படும். பழைய சந்தைகளில் யாழ்ப்பாணப் பண்பாட்டின் பெருமைகளைப் பறைசாற்றும் பல்வேறு பொருட்களை வாங்கலாம். பனை ஓலைப் பாய்கள் பெட்டிகள், வண்ண வண்ணக் கடகங்கள்... நார்க்கடகங்கள்...இவை ஒரு புறம். புற்பாய்கள் நீற்றுப் பெட்டிகள்.......சுளகுகள்....கொட்டைப் பெட்டிகள்.. இவை இன்னொரு புறம். வெற்றிலை.. பாக்கு... நாறல் பாக்கு.. நுங்குப் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, இவை ஒரு பக்கம். ஒடியல்... புழுக்கொடியல்..... பனாட்டு, பாணிப்பனாட்டு, பனங்கட்டிகள், பனங்கட்டிக் குட்டான்கள் இன்னொரு புறம். பழக்கடை ஒருபுறம். காய்கறிக் கடைகள் இன்னொரு புறம். பானைசட்டிக் கடைகள் இன்னொரு புறம். யாழ்நகரின் நவீன சந்தை உலகத்தின் நாகரிகப் பொருட்களின் கிடங்கு, புடவைக் கடைகள் ஒருபக்கம். புத்தக கடைகள், நவீன பாணியில் அமைத்த கோப்பி பார்கள் ஒரு புறம்... றேடியோ றான்சிஸ்டர், ரேப்றெக்கோடர் கடைகள் பலசரக்குக் கடைகள்... நல்லெண்ணெயிலிருந்து லேற்றஸ் மொடல் றான்சிஸ்டர்வரை இங்கே வாங்கலாம். பழைய சந்தைக் கட்டிடங்கள் இரண்டும் சுண்ணாம்புக் கட்டிடங்கள்,சொக்கட்டான் விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் சேலை வடிவின. மத்தியில் ஒரு சதுரம். சதுரத்தின் நான்கு பக்கங்களிலும் இருந்து பிரிந்து நீண்டு அமைந்த நீள் சதுரங்கள். நவீன சந்தைக்கு அருகில் அமைந்திருக்கும் பழைய சந்தைக் கட்டிடத்தின் வடக்குப்புற வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குழாயில் தன் கால் முகத்தைக் கழுவிக் கொண்ட வயோதிபர் ஒருவர் வாயைக் கொப்பளித்துத் துப்பியபடி நிமிர்ந்து ஆஸ்பத்திரி வீதியைப்பார்த்தார். தமிழன்னை ஒளவையாரின் சிலையும் அதற்கப்பால் பிருந்தாவனம் கபேயும் தெரிந்தன. முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு பழைய சந்தைக் கட்டிடத்திற்குள் ஏறினார். இருபுறங்களிலும் கம்பிவலைகளினால் தடுத்து அடைக்கப்பட்ட பலசரக்குக் கடைகள். கம்பி வலைத்தடுப்புக்ளை அடுத்து, அடுக்கி வைக்கப்பட்டிருந்த நல்லெண்ணெய் போத்தல்கள், நெல்லிரப் போத்தல்கள், விநாகிரி இப்படிப் பலவகைப் போத்தல்கள் சந்தையின் மங்கிய லைற் வெளிச்சத்தில் தெரிந்தன. ஒன்பது மணியுடன் சந்தையின் பிரகாசமான லைற்றுக்கள் அணைக்கப்பட்டு விடும். ஆங்காங்கு மங்கலான லைற்கள் தாம் இருளை விரட்ட முயன்று கொண்டிருக்கும். வற்றிய உடல்வாகு. ஒட்டிய வயிறு. நடக்கும் போது விழுந்துவிடுவாரோ என்று எண்ண வைக்கும். தளர்ச்சி நடை. மெதுவாக இடதுபக்கக் கடைகளின் கம்பி வலைத் தடுப்பைப் பற்றியவாறு ஏறினார் அவர். 13ம் இலக்கக் கடையின் வலதுபக்க முன் மூலையில் போர்த்தபடி படுத்திருந்த ஒரு உருவம் ஒரு தடவை புரண்டு படுத்தது. "என்ன மணியத்தார்! நித்திரை வரவில்லையோ?" என்று வயோதிபர் கேட்டார். "ஏனோ வருகுதில்லை. ஏன் செல்லப்பா படுக்காமல் திரியிறாய்?......" என்று கேட்டார் மணியத்தார். "படுக்கத்தான் போறன். இண்டைக்குக் காத்தில்லை. புழுங்குது" செல்லப்பர் என்ற அந்த வயோதிபர் தன்னுடைய பாயை எடுத்து 12 ஆம் இலக்கக் கடையின் இடதுபக்க முன் மூலையில் விரித்துக் கொண்டார். விரித்த பாயில் அமர்ந்தார். ஆஸ்பத்திவீதியில் ராக்சியொன்று வேகமாக விரைகின்ற சத்தம் எழுந்தது. இரு வாலிபர்கள் சயிக்கில் ஒன்றில் சினிமாப் பாடல் ஒன்றினை உரக்கப் பாடியவாறு கொட்டிப் பக்கமாக விரைந்தனர். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக செல்லப்பர் அக்கடையின் முன் படுத்து உறங்கி வருகின்றார். பழைய சந்தையின் கூரை உச்சியில் குடி கொண்டிருக்கும் புறாக்கள் தூக்கம் கலைந்து ஒரு வினாடி சிறகுகளை அடித்துக்கொண்டன. மின்சார நிலைய வீதியில் லொறியொன்று பேரிரைச்சலுடன் விரைவது சந்தையின் வடக்குப்புற வாயிலூடாகத் தெரிகின்றது. வீமனின் கடைப் பலகை மேசைமீது கறுப்புப் பூணையொன்று தாவி ஓடி ஏறியது... "முருகா.... "என்று ஒரு தடவை கடவுளை அழைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்தார்.. எத்தனை ஆண்டுகள்.?...... ஒடுங்கிய வீதிகளையும் பதிவான சின்னஞ்சிறு கடைகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாணப் பட்டினம் நினைவு வருகின்றது. முற்றவெளி மைதானம்....... காங்கேசன்துறை வீதி மின்சார நிலைய வீதி, பறங்கித் தெரு இவ்வளவிற்குள் அடங்கியிருந்த யாழ்ப்பாண நகரம். அவர் கண்முன்னேயே விரிந்து பெரிதாகிவிட்டது. இன்றைய ஸ்ராலிய வீதியில் அன்று இரவில் தனியே செல்ல முடியாது. அவ்வளவு பற்றை வெளி. ஆள் நடமாட்டமில்லாத பகுதி. அன்றைய யாழ்ப்பாணத்தின் ஒடுங்கிய வீதிகளில் மாட்டு வண்டிகளின் சலங்கை ஒலி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும். தெருவிளக்குகள் சந்திகளில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் மாலை ஆறு மணிக்குள் நகரத்தின் கலகலப்பும் பரபரப்பும் அடங்கிவிடும். தூரத்துக் கிராமங்களில் இருந்து பட்டினத்திற்கு வருகின்ற மாட்டுவண்டிப் பயணிகள் இரவு வேளைகளில் நகரத்துக்குள் வரநேர்ந்தால் சத்திரத்தில் தங்கிக் கொள்வார்கள். எவ்வளவு இனிமையான காலம்! இன்று நகரத்தில் ஒரே யந்திர வேகம்! அகன்ற வீதிகள், மாடிக் கட்டிடங்கள், இரவைப் பகலாக்கும் மின்சரா விளங்குகள், மாட்டுவண்டிகளை முன்னர் போலக் காணமுடியாது. வண்டி நிரம்பச் சரக்கு மூடைகளை ஏற்றிய பெரிய பார வண்டிகளை பெரிய வடக்கன் மாடுகள் கழுத்துச் சலங்கைகள் கலகலவெனச் சப்திக்க இழுத்துச் செல்கின்ற அன்றைய காட்சி..... பெரிய இசுசூ லொறிகளில் மூடைகளை அடுக்கி ஏற்றிக்கொண்டு புகையைக் கக்சி நகரத்தை அசுத்தமாக்கிக் கொண்டு விரைகின்ற யந்திர வண்டிகள் விரைகின்ற இன்றைய காட்சி. எவ்வளவு மாற்றம். யாழ்ப்பாண நகரம் தன் தூய்மையைப் பேணிப் பாதுகாத்த காலம் அது. குறைவான மக்கள், குறைவான பிரச்சினைகள், பிரச்சினைகள் என்றுதான் இல்லை? மூக்குள்ளவரை சளி இருக்கத்தான் செய்யும். அண்ணனும் தம்பியும் அடித்துக் கொண்டார்கள். மச்சானும் மச்சானும் வெட்டிக் கொண்டார்கள். மறுநாளே ஒன்று சேர்ந்து கொண்டார்கள். வேறொருவன் குறுக்கிடவில்லை. இனத்தின் ஒருமை அன்றிருந்தது. இன்றோ...? பல இனமக்கள் பலவித முகங்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லை இன்றிருப்பவர் நாளையில்லை. உணர்ச்சிகளும் அப்படித்தான். ஆள்பவர் ஆளப்படுபவர். கண்கள் மெதுவாகச் சோரத் தொடங்கின. அவர் நித்திராதேவியின் கரங்களில் பூரணமாக விழும்போது...... |
| < Previous | Next > |
|---|

Burning of Jaffna library, a symbol of Sri Lankan Tamils education, by Sri Lankan Government backed organised mobs , in 1981 will be remembered by Tamils in Sydney Australia. Sydney Tamil Resource Cenre is organise a Flag Week on 31st May 2008, sources said. The burning of the Jaffna library was an important event in the ongoing Sri Lankan civil war. An organized mob backed by Sri Lankan Government went on a rampage on the nights of May 31 to June 2, 1981, burning the Jaffna public library. It was one of the violent examples of ethnic biblioclasm of the twentieth century. The library at the time of destruction was one of the biggest in Asia containing over 97,000 unique books and unique manuscript. It is regarded as part of Sri Lankan Governments Genocide.





Post New Event








